Enable Javscript for better performance
1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வெற்றி

    By திண்டுக்கல்  |   Published on : 17th May 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக வேட்பாளரை விட 1,27,845 வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் எம்.உதயகுமார் வெற்றி பெற்றார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் காங்கிரசிடமிருந்து திண்டுக்கல் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

    2014 மக்களவைத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகள் சார்பிலும், 12 சுயேட்சை வேட்பாளர்களும் என மொத்தம் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1616 வாக்குச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 6,94,842 ஆண் வாக்காளர்களில் 5,37,902 பேர்(77.41), 7,03,861 பெண் வாக்காளர்களில் 5,44,133 பேர்(77.31), 107 மூன்றாம் பாலினத்தவர்களில் 24 பேர்(22.43) என மொத்தம் 10,82,059 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai