Enable Javscript for better performance
சவாலில் வென்ற இந்நாள் அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பேட்டி அளித்து வந்தனர். வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் இந்நாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் வெற்றி பெற்றார்.

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன. அதில் ஆத்தூர் தொகுதி வாக்குகள் 22 சுற்று, நத்தம் 21 சுற்று, பழனி 20, திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் 19 சுற்று, நிலக்கோட்டை 18 சுற்றுக்களாகவும் எண்ணப்பட்டன. முடிவில் அதிமுக வேட்பாளர் எம்.உதயகுமார் 1,27,845 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆத்தூர் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

    பழனி தொகுதியில் 17,324, ஒட்டன்சத்திரத்தில் 14,844, நத்தத்தில் 35,886, நிலக்கோட்டையில் 36,599, திண்டுக்கலில் 32,588 வாக்குகளும் அதிமுக வேட்பாளரை முன்னிலை பெற வைத்தது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான ஐ.பெரியசாமி தொகுதியில் 8684 வாக்குகள் திமுகவுக்கு கூடுதலாக கிடைத்து.

    சவாலில் வென்ற இந்நாள் அமைச்சர்: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு வந்தது முதல், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அதிமுக மற்றும் திமுக சார்பில் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பேட்டி அளித்து வந்தனர். இந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியானதில் அதிமுக வேட்பாள்ர் உதயகுமார் 1,27,845 வாக்குகள் முன்னிலை பெற்றார். இதன் மூலம் தேர்தல் சவாலில் இந்நாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai