Enable Javscript for better performance
பழனி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை சந்தைப்பேட்டை குருவிக்காரன் சாலையை சேர்ந்தவர் கமலா(55). இவரது மகள் இருளாயி(30). இவருக்கு பழனி அருகே சாமிநாதபுரம் ஜிவிஜி நகரை சேர்ந்த திருக்கண்ணன் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். தம்பதியர் ஜிவிஜி நகரில் வசித்து வந்தனர். இருளாயிக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலி வந்துள்ளது. அப்போது அதிக அளவில் ரத்தப்போக்கும் இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லாத நிலை இருந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை திருக்கண்ணன் வேலைக்கு சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாதபோது இருளாயி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai