Enable Javscript for better performance
அதிமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: அமைச்சர்

    By வத்தலகுண்டு  |   Published on : 19th May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நிலக்கோட்டை திறந்த வெளி கலையரங்கில் நடைபெற்றது. திண்டுக்கல் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி லிங்கம் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

    கண்காட்சியை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திறந்து வைத்து பேசியதாவது:

    அதிமுக அரசின் மீது மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தமிழக முதல்வர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளன. முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேணுகோபால் (பழனி), பழனிச்சாமி (வேடசந்தூர்), ராமசாமி (நிலக்கோட்டை) மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சேகர், நிலக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, வத்தலகுண்டு ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மோகன், வத்தலகுண்டு ஒன்றியச் செயலர் பாண்டியன், நத்தம் தொகுதி செயலர் கண்ணன், நிலக்கோட்டை தொகுதி செயலர் கனகதுரை, மாவட்ட மகளிர் அணி செயலர் வளர்மதி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.கே.டி.நடராஜன், திண்டுக்கல் ஆவின் தலைவர் திவான்பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai