Enable Javscript for better performance
ஜல்லிக்கட்டுக்கு தடை: காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டுக்கு தடை: காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டம்

    By நத்தம்  |   Published on : 19th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம்,சாணார்பட்டி அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

    தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

    இந்ததடையை நீக்கக்கோரி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், பல கிராமங்களில் கடையடைப்பு,போராட்டமும் நடந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஊர்த் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இங்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் காளைகள் வளர்த்து வந்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊர் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டியும் முக்கிய வீதிகள் வழியாக கிராமத்தினர் ஊர்வலமாக வந்தனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai