ஜல்லிக்கட்டு தடையை நீக்க காளை வளர்ப்பாளர்கள் மனு
By பழனி, | Published on : 19th May 2014 12:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடையை நீக்க வேண்டுமென காளைகளின் உரிமையாளர்கள் காளை கொம்பில் கருப்புத்துணியை கட்டி வந்து மனு கொடுத்தனர் .
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுஅமைப்புகளும் உச்சநீதிமன்ற தடைக்கு வருத்தம் தெரிவித்து தங்கள் கண்டனத்தை வெவ்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றனர். பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியில் சுமார் 100 ஆண்டு பழமையான அருள்மிகு கோர்ட் காளியம்மன் திருக்கோயிலில் வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி நெய்க்காரபட்டியில் ஏராளமான வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏராளமான ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர் தங்கள் காளைகளின் கொம்பில் கருப்புத்துணியை கட்டி நெய்க்காரபட்டியில் உள்ள வருவாய் துறை ஆய்வாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மீண்டும் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கான வழிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.