Enable Javscript for better performance
நத்தத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    By நத்தம்,  |   Published on : 19th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதைக் கொண்டாடும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொகுதிச் செயலர் கண்ணன் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலர் ஷாஜகான், நகரச் செயலர் சிவலிங்கம், நகர் பேரவை செயலர் சேக் தாவூது, மாவட்ட பேரவை துணைச் செயலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் கருப்பையா, சேக் சிக்கந்தர், ராஜாராம், ஜெயசீலன், சதாசிவம், காளிதாஸ், செந்தில், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai