Enable Javscript for better performance
பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று வழிகாட்டி நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று வழிகாட்டி நிகழ்ச்சி

    By திண்டுக்கல்,  |   Published on : 19th May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை (மே 19) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா. சுகுமார் தேவதாஸ் தெரிவித்துள்ளது: பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்து எந்தத் துறையை தேர்வு செய்து படிக்கலாம், அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராணுவம், மருத்துவம், நீதித்துறை, கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

    திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai