Enable Javscript for better performance
பைக் மீது வேன் மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் வேன் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொடைக்கானல் குறத்திச் சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார்(19)கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களான கல்குழியைச் சேர்ந்த பாண்டி, செந்தில்குமார் ஆகியோருடன் ஒரே பைக்கில் மூன்று பேரும் பெருமாள்மலைக்குச் சென்றுள்ளனர். பைக்கை பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார்.

    வெள்ளிநீர் வீழ்ச்சியருகே வந்து கொண்டிருக்கும் போது கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த வேனில் எதிர்பாரா விதமாக பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ்குமார் உயிரிழந்தார். பாண்டி, செந்தில்குமார் இருவரும் பலத்த காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai