Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பழனி ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 20) மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி அருகே சுக்கமநாயக்கன்பட்டி ஸ்ரீ சுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரி விவேகானந்தா கலையரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை குறித்து திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக டீன் இளங்கோவன் நேர்முக சேர்க்கை, கலந்தாய்வு குறித்து விளக்கவுள்ளார். பழனி கனரா வங்கியின் முதன்மை மேலாளர் கோபகுமார் கிராமப்புற மாணவர்களுக்கான கல்விக்கடன் குறித்த விபரங்களை வழங்கவுள்ளார். 10ஆம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் கலை, அறிவியல் பொறியியல், மருத்துவம் பயில்வதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்பு, அரசுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் நிகழ்ச்சியில் விவரங்கள் தெரிவிக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக ஒட்டன்சத்திரம், உடுமலை, தாராபுரம், பழனி போன்ற இடங்களில் இருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் சரவணன், தீபாசரவணன், முதல்வர் முனைவர் சரவணன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai