Enable Javscript for better performance
அரசு ஓவியத் தேர்வுதாமதத்தால் தேர்வில் பங்கேற்றவர்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஓவியத் தேர்வுதாமதத்தால் தேர்வில் பங்கேற்றவர்கள் பாதிப்பு

    By திண்டுக்கல்  |   Published on : 20th May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓவியத் தேர்வு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியதால், தேர்வில் பங்கேற்றவர்கள் பாதிப்படைந்தனர்.

     திண்டுக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில், திங்கள்கிழமை அரசு ஓவியத் தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 320 பேர் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு, 50 நிமிடங்கள் தாமதமாக 9.50 மணிக்கு தொடங்கியது. இதனால் 3 மணி நேரம் நடக்க வேண்டிய, இந்த தேர்வு 2 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது.

    பொருள்கள் இல்லாமலே பொருள் சித்திரம்:

     முற்பகலில் நடைபெற்ற தட்டை உருவம் வரைதலுக்குப்(என்லார்ஜ்மெண்ட் ஓவியம்) பின், பிற்பகல் 1 மணிக்கு பொருள் சித்திரம் வரையும் தேர்வு தொடங்கியது. இதில் ஓவியம் வரைவதற்கான பொருள்களுக்கு பதிலாக அவற்றின் படங்கள் நகல் எடுத்து சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் தூரத்தில் இருந்தவர்களுக்கு பொருள்களின் உருவம் சரியாக தெரியாமல், ஓவியத்தில் ஒளிநிழல்(லைட் அண்ட் ஷேட்) செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

     மேலும் மாணவர்களுக்கான இருக்கை வசதிகளும் சரியாக செய்யப்படாததால், சிலர் தரையில் அமர்ந்து ஓவியம் வரைந்தனர். இதுபோன்ற பல்வேறு இடையூறுகளால் தேர்வு எழுதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தேர்வு எழுதியவர்களிடம் கேட்டபோது:

     ஒரு மணி நேரத்திற்கு பின் தேர்வு தொடங்கிய போதிலும், சரியான நேரத்திற்கு தேர்வு தாள்களை பெற்றுக்கொண்டனர்.

    3 மணி நேரம் நடைபெற வேண்டிய தேர்வை, 2 மணி நேரம் மட்டுமே நடத்தியதால் முழுமையாக வரைய முடியவில்லை. இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால், பலர் தரையில் அமர்ந்து வரையும் நிலை ஏற்பட்

    டது.

     அதேபோல் ஓவியம் வரைவதற்கான பொருள்களை வழங்காமல், அவற்றை வரைபடமாக சுவற்றில் ஒட்டி வைத்தனர். இதனால் தூரத்தில் அமர்ந்து இருந்தவர்களுக்கு, அந்த படங்கள் சரியாக தெரியவில்லை.

     ஒரு மையத்தில், தேர்வு எழுதியவருக்கு பதிலாக வெளியிலிருந்து வந்த ஒருவர் படம் வரைந்து கொடுத்தார். இதனை அறை கண்காணிப்பாளரும், பள்ளியின் தலைமையாசிரியரும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai