Enable Javscript for better performance
உடலில் தீப்பற்றி இளைஞர்சாவு- Dinamani

சுடச்சுட

    

      பழனி அருகே உடலில் தீப்பற்றி வாலிபர் உயிரிழந்தார்.

         பழனி அருகே அமரபூண்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(22).  இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக விளக்கு கீழே விழுந்து, அதில் இருந்த மண்ணெண்ணெய் மணிகண்டன் மீது சிதறி உடலில் தீப்பிடித்ததில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai