Enable Javscript for better performance
கிணற்றுக்கு வைக்கப்பட்ட வெடியில் இரு பெண்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கிணற்றுக்கு வைக்கப்பட்ட வெடியில் இரு பெண்கள் காயம்

    By பழனி  |   Published on : 20th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே கிணற்றுக்கு வைக்கப்பட்ட வெடியால் பாறைகள் சிதறி விழுந்து இருபெண்கள் காயமடைந்தனர். வீடு சேதமடைந்தது.

     பழனி அருகே புதுஆயக்குடியில் இருந்து சித்தன்மலை செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன.  தற்போது நிலவி வரும் கோடையால் விளைநிலங்களில் உள்ள கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன.  இப்பகுதியில் உள்ள ஒரு பகுதி வயலின் உரிமையாளர் கருப்புசாமி(55).  இவர் தனக்கு பாத்தியப்பட்ட கிணற்றை தூர்வார ஏற்பாடு செய்து வேலம்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ்(52), பொன்னாபுரம் ராஜவேல்(39) ஆகியோர் உதவியோடு சனிக்கிழமை கிணற்றை தூர்வாரும் பணி மேற்கொண்டுள்ளார். இதற்காக கிணற்றில் இருந்த பாறைக்கு வேட்டு வைத்துள்ளனர்.  இதில் கிணற்றில் இருந்த பாறைகள் சிதறி வெளியே வந்து பலமீட்டர் தூரத்துக்கு சிதறியுள்ளது.  இதில் பேருந்துக்காக நின்றிருந்த மானூர் தெற்கு தெருவை சேர்ந்த ரபீக்அகமது என்பவர் மனைவி ஜென்னத்துல் பிர்தெüஸ்(28) மீதும், வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த சேக் அப்துல்லா மனைவி ஆரிபாபேகம்(32) மீதும் பாறை விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர்.  ஆரிபா பேகத்தின் வீட்டின் மேற்கூரையில் உடைத்து விழுந்த கற்களால் வீட்டில் இருந்த மிக்ஸி போன்ற பொருள்களும் சேதமடைந்தன.  இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai