Enable Javscript for better performance
கொடைக்கானலில் இளைஞர் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    :கொடைக்கானலில் இளைஞர்களுக்கு வரலாற்றை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்தியாவில் முதன் முதலாக அச்சுப் பதிப்பகத்தை அறிமுகப்படுத்திய ஹென்றிகுவஸ், தமிழுக்குச் சதுரகராதியைக் கொடுத்து உரைநடையை வகுத்த வீரமாமுனிவர் ஆகியோர் இயேசுசபையைச் சார்ந்தவர்கள். இந்த அமைப்பில் உள்ள இளைஞர்களுக்கு வரலாற்றை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு தலைவர் அருட்பணி செபஸ்திராஜ் தலைமை வகித்தார். அருட்தந்தை ராஜ் இருதயா முன்னிலை வகித்தார்.  சென்னைப் பணித்தலத்தின் தலைவர் செபமாலை ராஜா மற்றும் அருட் பணியாளர்கள் பிரிட்டோ வின்சென்ட், எட்வர்டு ஜெகநாதன், ஆரோக்கியசாமி ஜெகநாதன், அருள்தாஸ், மதுரை கருமாத்தூர் கல்லூரி பேராசிரியர் பெர்னாட்ஷா, ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கில் பேசினர்.

    இக் கருத்தரங்கில் இந்திய மற்றும் தமிழக வரலாற்றில் தடம் பதித்த அமைப்பின் முன்னோர்கள் வாழ்ந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டும். இவர்களைப் போல மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சென்னை அருள்கடல் இளைஞர்கள் செய்திருந்தனர். பிரபு நன்றி கூறினார். கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai