Enable Javscript for better performance
கொடைக்கானல் விடுதியில் நடனமாடிய 28 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் விடுதியில் நடனமாடிய 28 பேர் கைது

    By கொடைக்கானல்  |   Published on : 20th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் அருகே தனியார் விடுதியில் அனுமதியின்றி நடனமாடிய இளைஞர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 28 பேரை காவல் துறையினர் கைது செய்து, ரூ. ஒரு கோடி மதிப்பிலான எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள், மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் தனியாருக்குச் சொந்தமான நவீன விடுதி உள்ளது. இந்த விடுதியில் அனுமதியில்லாமல் நடனம் மற்றும் அரசு அனுமதி பெறாமல் பார் வைத்து நடத்தி வந்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக கொடைக்கானல் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து டி.எஸ்.பி.மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் தனியார் விடுதியில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் டிஸ்கோ பார், எலட்ரிக் பாரஸ்ட் 2014- என்ற பெயரில் அனுமதி பெறாமல் முறையற்ற நடனம், மதுபானங்கள் விற்பனை, பொது மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமான நவீன ஒளி,ஓலி அமைப்புகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியின் உரிமையாளர் ராஜ்(65)அவரது மகன் சாத்விக் நாத் என்ற போதி(27) மற்றும் சென்னை, கொடைக்கானலைச் சேர்ந்த சாரதி (25), சுவில்(26), பிரதீப்(25), பிரசாந்த்(25), பிரவீன்குமார்(25), அசோக்(25), ரோசன்(26), சாகித்கான்(21), சாஜிலால்(38), ஜவஹர்(25), சன்ஸ்சிங்(25), செர்வின்(25), ரவிக்குமார்(25), சிவா(26), பிரான்ஸிஸ், ஆகாஷ், நிவேத் சுதன், பாபு, சாய், மீராங், நேரு ஹரினி,  ஸ்மித் ஆகிய 28-பேரை காவல் துறையினர் கைது செய்த அவர்கள்  மேல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விடுதியில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டப்பட்ட சுமார் ரூ. ஒரு கோடி மதிப்புள்ள எலக்ட்ரிக், எலக்ட்ரானிக், அரங்க அலங்காரப் பொருள்கள், மதுபாட்டில்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து காவல் துறையினர் கைப்பற்றினர்.

    இது குறித்து டி.எஸ்.பி. மோகன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொடைக்கானல் பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள், விடுதிகளில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்படி சோதனையிடப்பட்டு வருகிறது. இதில் பூம்பாறைப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அனுமதியில்லாமல் முறையற்ற நடனங்கள், பார் வைத்து நடத்தியது, பொது மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக தற்போது 28-பேரை கைது செய்துள்ளோம். மேலும் அந்த விடுதியிலிருந்த வெளி நாட்டினரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    '

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai