Enable Javscript for better performance
கோயில் மரத்தை வெட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே வி.கே.மில்ஸ் பகுதியில் உள்ளது அருள்மிகு சொர்ணகாளியம்மன் கோயில்.  இக்கோயில் முன் நிழல் தருவதற்காக புங்கை மரம், ஆலமரம், அத்திமரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அயோத்தி என்பவர் தனது மனைவி வாசுகி, உறவினர் வாசு ஆகியோருடன் வந்து மரங்களை வெட்டியுள்ளார்.  கோயில் நிர்வாகிகள் சம்பவத்தை தடுக்க முயன்ற போது கொலைமிரட்டல் விடுத்து விட்டு மரங்களை வெட்டிவிட்டு சென்று விட்டனர். 

    இதுகுறித்து கோயில் நிர்வாக தலைவர் செல்வராஜ்(53) கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai