Enable Javscript for better performance
தங்கம் தூய்மை அறிய இலவச வசதி- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தங்கநகை கண்காட்சியில் தங்கத்தின் தூய்மையை மக்கள் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

      பழனி சண்முகபுரம் சக்தி திருமண மண்டபத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மூன்று நாள்களுக்கு வைரம் மற்றும் வைர நகைகளுக்கான சிறப்பு கண்காட்சி விற்பனை துவங்கப்பட்டது.  கண்காட்சி விற்பனையை டாக்டர் தர்மாம்பாள் துவக்கி வைத்தார். ஜேசுகுமார் வரவேற்புரை வழங்கினார். மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சி விற்பனையில் ரூபாய் மூன்றாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை மதிப்பிலான தங்க, வைர நகைகள் கண்காட்சி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி விற்பனையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நகைகளின் தூய்மையை காரட் மீட்டர் மூலம் இலவசமாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தவிர வைர, டைமண்டைன் கற்களுக்கு 25சதம் தள்ளுபடியும், மாணிக்கம், மரகத கற்களுக்கு 15சதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai