Enable Javscript for better performance
தந்தையை கொன்ற மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    பணப் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில், தந்தையை கொலை செய்ததாக மகனை போலீஸார் கைது செய்தனர்.

     திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கூம்பூர் அடுத்துள்ள வெள்ளையகவுண்டனூர் பகுதியைச் சேரந்தவர் கருப்பண்ணக்கவுண்டர்(60). அவரது மகன் பால்ராஜ்(40) வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தந்தைக்கு உதவியாக ஒரு தொகையை பால்ராஜ் கொடுத்துள்ளார்.

     இதனிடையை குடும்பப் பிரச்னை காரணமாக, பால்ராஜின் மனைவி தனியாக பிரிந்து சென்றுவிட்டாராம்.

    இதனால் விரக்தி அடைந்த பால்ராஜ், தந்தையிடம் பணத்தை கேட்டுள்ளார்.

     இதுதொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தோட்டத்தில் இருந்த இரும்பு குழாய்களை எடுத்து பால்ராஜ் விற்று விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக திங்கள்கிழமை மாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையை மீண்டு மோதல் ஏற்பட்டுள்ளது.

     இதில் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், தந்தையை கடப்பாரையால் தாக்கினாராம்.

    இதில் பலத்த காயமடைந்த கருப்பண்ணக்கவுண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீஸார் பால்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai