Enable Javscript for better performance
நத்தத்தில் மழைவேண்டி யாகபூஜை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் நிலவி வரும் வறட்சி மாறி மழைபெய்யவேண்டி நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயிலில் வருணஜெபம் யாகபூஜை நடந்தது. இதில் அங்குள்ள யாகசாலையில் ஹோமம் பூஜை நடந்தது. தொடர்ந்து வருணஜபமும் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் கோவில்பட்டி கிராம அக்ரஹாரம், கீழத்தெரு, மேலத்தெரு, கொண்டையம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து அங்குள்ள கைலாசநாதர், செண்பகவள்ளியம்மனுககு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மழைவேண்டி பிரார்த்தனையும் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai