Enable Javscript for better performance
பழனி அருகே பெண் மாயம்- Dinamani

சுடச்சுட

    

      பழனி அருகே ஆயக்குடி ஜோதிநகரைச் சேர்ந்தவர் தோப்படி கருப்புசாமி மனைவி இந்திராணி(43).  இவரது மகள் மகாலட்சுமி(22).  இவரை கொடைக்கானல் தாலுகா பெரியூர் பள்ளத்துக்கால்வாயை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவருக்கு கடந்த இரு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்.  தம்பதியருக்கு தற்போது 11 மாத ஆண் குழந்தை உள்ளது.  இக்குழந்தை மூளைவளர்ச்சியின்றி இருந்ததால் இந்திராணி வீட்டில் வைத்து பராமரிப்பு செய்து வந்துள்ளனர்.  இதற்காக அதிக செலவானதால் கடந்த மே.7ஆம் தேதி கணவரைப் பார்த்து பணம் வாங்கி வருவதாக கூறிச் சென்ற மகாலட்சுமி ஊருக்கு செல்லாமல் மாயமானார்.  பல இடங்களிலும் தேடிப்பார்த்த நிலையில் கடந்த மே.9ஆம் தேதி மகாலட்சுமியே செல்போனில் பேசி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் ஆலையில் வேலை செய்வதாகவும், தம்மை தேடவேண்டாம், பணம் சேர்த்து விட்டு வருகிறேன் என கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.  தாராபுரத்தில் அவர் தெரிவித்த முகவரியில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆயக்குடி காவல் நிலையத்தில் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai