Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    பரபட்சமின்றி சுழல்மாற்றம் செய்யக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

     திண்டுக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு பிஎஸ்என்எல்இயூ திண்டுக்கல் கிளைத் தலைவர் ஏ.ஞானசுந்தரம் தலைமை வகித்தார்.

     ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுழல்மாற்றத்தை, பாரபட்சமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவைமையத்தில் செயல்படாமல் உள்ள கணினி, பிரிண்டர், உணவுக்கூடம் போன்றவற்றை சீரமைக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்க்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.

     காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தர்னாவுக்கு பிஎஸ்என்எல்இயூ, டிஇபியூ, பிஇஏயூ உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் ஜான்போர்ஜியா, வைத்தியலிங்கபூபதி, சூரியன், மதனமுனியப்பன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai