Enable Javscript for better performance
வத்தலகுண்டில் ஆணழகன் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 23ஆவது ஆணழகன் போட்டி   ஏ.எம்.எஸ்.ராசி மகாலில் நடைபெற்றது.

    இந்த போட்டிக்கு தமிழ்நாடு பாடிபில்டிங் தலைவர் விஷ்ணு தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் மலைராஜன், மாவட்ட ஆணழகன் சங்க காப்பாளர் மருத்துவர் சாம்இளங்கோ முன்னிலை வகித்தனர்.  திண்டுக்கல் மாவட்ட ஆணழகன் சங்க செயலர் நாகவடிவேல் வரவேற்று பேசினார்.

    ஆணழகன் போட்டியை தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலர் இளங்கோவன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த ஆணழகன் போட்டியில் 63 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த ஐய்யப்பன் சிறந்த உடல்கட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆணழகன் சங்க இணைச்செயலர் ராஜேஸ் நன்றி கூறினார். தேசிய நடுவர்கள் ஜெகநாதன், சுப்பிரமணியன்  மற்றும் செல்வராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai