Enable Javscript for better performance
வானில் பறக்கும் சாகச நிகழ்ச்சி: திண்டுக்கல்லில் தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    வானில் பறக்கும் சாகச நிகழ்ச்சி: திண்டுக்கல்லில் தொடங்கியது

    By திண்டுக்கல்,  |   Published on : 20th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வானில் பறந்து சாகசம் நிகழ்த்தும் பாராகிளைடிங் பயிற்சி திண்டுக்கல்லில் தொடங்கியது.

     இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையத்தின் சார்பில் நடைபெறும் பாராகிளைடிங் பயிற்சி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. பாராகிளைடிங், பாராசைலீங், ஹேங் கிளைடிங், பவர் ஹேங் கிளைடிங், பவர் பாராகிளைடிங் ஆகிய 5 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

     ஆண், பெண் என இருபாலரும் வயது வரம்பின்றி, இந்த பயிற்சியை பெறலாம்.

    முறையான பயிற்சி எடுத்தால், யார் வேண்டுமானாலும் வானில் பறக்கலாம் என்கிறார் பயிற்சியாளர் கிளைடர் பி.பாபு இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

     காற்றின் திசை, வேகம், தட்பவெட்ப சூழ்நிலையின் அடிப்படையில் வானில் பறக்கலாம். 500 முதல் 2000 அடி உயரம் வரை விண்ணில் பறந்து சாகசம் நிகழ்த்தலாம். சாதாரணமாக ஒருமுறை பறப்பதற்கு ரூ.850 கட்டணம் வசூலிக்கப்படும்.

    திண்டுக்கல் பகுதியில் முதல் முறையாக பாராகிளைடிங் பயிற்சி நடத்துவதால், ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்கள் மட்டுமே இந்த வசதி கிடைக்கும்.

     பின்னர் கோடைவிழாவை முன்னிட்டு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஒரு வார காலம் பாராகிளைடிங் பயிற்சி நடத்தப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai