Enable Javscript for better performance
1000 மதிப்பெண் பெற்ற விடுதி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    1000 மதிப்பெண் பெற்ற விடுதி மாணவர்களுக்கு பாராட்டு

    By திண்டுக்கல்  |   Published on : 20th May 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ்2 பொதுத் தேர்வில் 1000க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் திங்கிள்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

     பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் மாணவ, மாணவியருக்காக தமிழக அரசின் சார்பில் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களில் சிலர், அண்மையில் வெளியான பிளஸ்2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு கூடுதலாகப் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 1000 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 2 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் 17 மாணவர்களும், ஒரு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் 4 மாணவர்களும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

     இதனை அடுத்து அவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் திங்கள்கிழமை நினைவு பரிசுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.  நிகழ்ச்சியல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விடுதி காப்பாளர்கள், மாணவ-மாணவியரின் பெற்றோர் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai