Enable Javscript for better performance
கோடை விழா மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா- Dinamani

சுடச்சுட

    

    கோடை விழா மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா

    Published on : 21st May 2014 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர்க் கண்காட்சிக்காக தயாராகிறது.

      கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 53ஆவது மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக பூங்காவில் நடப்பட்ட, ரோஜா, டேலியா, குருவிப் பூ, கொக்குப் பூ, தவளை வாய், டையாந்தேஸ், ஆரனத்தி கோலம், மேரி கோல்ட், ஜெப்ரோனியா, கல் ரோஜா, ஜெனியா, ஆந்தோரியா, ஆஸ்டர்ஸ், பிங்க், ஆஸ்டர் அமலகம் உள்ளிட்ட பல்வேறு வகையான 800 வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.   நூற்றுக்கணக்கான பூச்செடிகள் மேடைகளில் வைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, அரசு மற்றும் தனியார் துறையின் சார்பில் அமைக்கப்பட உள்ள அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் சாரல் மழை: கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலையில் மேகமூட்டமும், அவ்வப்போது லேசான சாரல் மழையும் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாரல் மழையில் பூக்கள் சேதமடையாத வகையில், பூங்கா பணியாளர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai