Enable Javscript for better performance
சிபிஎஸ்இ தேர்வு முடிவு: அக்ஷயா அகாதெமி நூறு சதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ தேர்வு முடிவு: அக்ஷயா அகாதெமி நூறு சதம் தேர்ச்சி

    By dn  |   Published on : 21st May 2014 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில், பழனி அக்ஷயா அகாதெமி பள்ளி நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

       மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் அகில இந்திய அளவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவில், பழனி அக்ஷயா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய 35 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

       மாணவிகள் ஆகர்ஷண ஸ்ரீநிதி, மிகிதா, நித்யா, கார்த்திகா, ஸ்வேதா, விக்னேஸ்வரி, மாணவர்கள் பாலபிரனேஷ்பாபு, ஹரிபிரசாத், சரவணக்குமார் ஆகியோர் 10-க்கு 10 சிஜிபிஏ பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

       தேர்வு எழுதிய 35 பேரில் 15 பேர் 9.8-க்கு மேலும், 19 பேர் 9.5-க்கு மேலும், 26 பேர் 9-க்கு மேலும், 30 பேர் 8.5-க்கு மேலும் சிஜிபிஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

       ஆங்கிலத்தில் 19 பேரும், தமிழில் 24 பேரும், கணிதத்தில் 11 பேரும், அறிவியலில் 17 பேரும், சமூக அறிவியலில் 20 பேரும், கணினி அறிவியலில் 20 பேரும் 10-க்கு 10 சிஜிபிஏ பெற்றுள்ளனர்.

      சாதனை படைத்த மாணவர்களை, பள்ளித் தலைவர்  பேராசிரியர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் புருஷோத்தமன், டிரஸ்டி துரைசாமி, முதன்மை முதல்வர் சந்திரசேகர், முதல்வர் பிரேமா, தலைமையாசிரியை விசாலாட்சி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai