Enable Javscript for better performance
செம்பட்டி அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்த விபத்தில் ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செம்பட்டி அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்த விபத்தில் ஒருவர் சாவு

    By dn  |   Published on : 21st May 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் டயர் வெடித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

       திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஜங்கால்பட்டியைச் சேர்ந்தவர்களான ராமன் (32) மற்றும் பாண்டியராஜன் (22) ஆகிய இருவரும், திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் நிலக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்துள்ளனர்.

      ஒட்டுப்பட்டி அருகே செல்லும்போது, எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் டயர் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகில் இருந்த மோட்டார் அறையின் சுவற்றில் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.  பலத்த காயம் அடைந்த பாண்டியராஜன், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, செம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai