Enable Javscript for better performance
திண்டுக்கல் மேயர் மருதராஜின் மனைவி காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வி. மருதராஜின் மனைவி ம. பத்மாவதி (60) செவ்வாய்க்கிழமை காலமானார்.

      உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 20) மாலை அவர் காலமானார்.

      அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (மே 21) பிற்பகல் 2 மணி அளவில் ஆர்.எம். காலனி மின் மயானத்தில் நடைபெறுகிறது.

      காலமான பத்மாவதிக்கு செல்வக்கனி, வீரமார்பன் ஆகிய மகன்களும், பொன்முத்து என்ற மகளும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai