Enable Javscript for better performance
நில மோசடி புகார்:10 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    நில மோசடி செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 10 பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (56). இவருக்கு, முள்ளிப்பாடி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளதாம். இந்த நிலத்துக்கான நடைபாதையை ஆக்கிரமித்து, போலியான ஆவணம் தயாரித்து சிலர் விற்பனை செய்ததாகத் தெரிகிறது.

      இதையடுத்து, திண்டுக்கல் 2ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், வெங்கடாசலம் வழக்குத் தொடுத்துள்ளார். விசாரணை நடத்திய நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்

    டது.

     அதன்பேரில், கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த நடுச்சாமி (55), ஜக்கம்மாள், காப்பிளியம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தாசையன், கோவிந்தராஜ், ஜக்கையன், தங்கபாண்டியன், திண்டுக்கல் கணேசன், மொட்டணம்பட்டி வெள்ளையம்மாள்,  அளவாசிப்பட்டி கணேசன் ஆகிய 10 பேர் மீது, குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai