Enable Javscript for better performance
மின் கம்பங்களை அகற்றாமல் பேவர் பிளாக் பதிக்கும் பணி:தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மின் கம்பங்களை அகற்றாமல் பேவர் பிளாக் பதிக்கும் பணி:தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை

    Published on : 21st May 2014 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியில், சாலையின் நடுவே இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      பழனி அடிவாரம் பூங்கா சாலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத் துறையினர் தடுப்புகள் கொண்டு தடுத்து, இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

      அகலமான இந்த சாலையை, திருவிழாக் காலங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமித்து கடைகள் அமைப்பது வழக்கம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைப்பது சவாலான காரியாகும்.

      இந்நிலையில், இந்த சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் மாற்றப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

      இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் ஜெயபால் கூறுகையில், மேற்கண்ட இடத்தில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க மின் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான நிர்ணயத் தொகையையும் கட்டுவதாக தெரிவித்துள்ளோம். தொகை செலுத்திய பிறகு, கம்பங்களை மாற்றியமைப்பதாக உறுதியளித்துள்ளனர். பின்னர், அப்பகுதிகளில் கற்களை மீண்டும் பதிப்பதால் சாலையில் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்தார்.

      மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தில் கம்பங்களை மாற்றியமைக்க, நெடுஞ்சாலைத் துறை குறிப்பிட்ட அளவு தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. அதை செலுத்திய பின்னரே கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் மாற்றியமைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

      சமூக ஆர்வலர் ராமலிங்கம் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறையினர் கம்பங்களை மாற்றியமைக்க முழுத் தொகையையும் செலுத்திய பிறகு பணிகளை துவங்கினால் நன்றாக இருந்திருக்கும். தற்போது மீண்டும் இடத்தை தோண்டினால் பணிகள் நிறைவாக இருக்காது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai