Enable Javscript for better performance
மே 26 முதல் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளினால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்கள் குறைதீர் கூட்டம், மே 26ஆம் தேதி முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து, ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி, மே 28ஆம் தேதி வரை மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்பட அனைத்து குறைகேட்புக் கூட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.  இந்த நிலையில், மே 19ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், மே 26ஆம் தேதி முதல் அனைத்து கூட்டங்களும் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai