Enable Javscript for better performance
லாரி மோதி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

    பழனி பாப்பாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் (45), சடையான் (65) ஆகிய இருவரும் கொடைக்கானல் பகுதிகளில் கூலி வேலை பார்த்து வந்தனர். வேலை முடித்து விட்டு கொடைக்கானல் அருகே குருசடி பகுதியில் நடந்து சென்ற போது பின்புறமாக வந்த லாரி இவர்கள் இருவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்று சக்திவேல் உயிரிழந்தார். சடையான் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான குண்டுபட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஏசுதாஸ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai