Enable Javscript for better performance
காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு:3 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு:3 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு

    Published on : 22nd May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த 3 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு விருப்பாச்சி தலையூத்துப் பகுதியிலிருந்து குடிநீர் விநியோகப்பட்டு வந்தது. மழை இல்லாததால், பரப்பலாறு அணையில் நீர் முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால், அணையில் இருந்து குடிநீருக்காக விநியோகிக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும், தலையூத்து பகுதியில் இருந்து வரும் குடிநீரும் நின்றுவிட்டது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கரூர் மாவட்டம், கட்டளை என்னுமிடத்திலிருந்து காவிரி ஆற்றில் ராட்சத குழாய் மூலம் எடுக்கப்படும் நீர், குஜிலியம்பாறை, வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் நகராட்சி மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்படுகிறது. பின்னர், அங்கிருந்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிப்பட்டு வந்தது.

    ஆனால், கடந்த 3 நாள்களாக குஜிலியம்பாறை அருகே பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதை குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் சரிசெய்து வருகின்றனர். இதை, வியாழக்கிழமை மாலைக்குள் சரி செய்து, வெள்ளிகிழமை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai