Enable Javscript for better performance
கொடைக்கானலில் மழை: இடி தாக்கியதில் மரம் கருகி விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மழை: இடி தாக்கியதில் மரம் கருகி விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    By கொடைக்கானல்,  |   Published on : 22nd May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் மழை பெய்தபோது, இடி தாக்கி மரம் கருகிவிழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மேகமூட்டமும், காற்றும் வீசி வந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. புதன்கிழமை அதிகாலை முதல் மிதமான வெயில் நிலவியது. அதைத் தொடர்ந்து, பிற்பகலில் திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது.

    நீண்ட நேரம் இடி தொடர்ந்து விழுந்ததால், கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள பழமையான மரம் கருகி விழுந்தது. இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, பூண்டி, போலூர் ஆகியப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பாம்பார்புரம் வழியாக மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு, வனத்துறை, மின் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சென்று மரத்தை அகற்றினர். இருப்பினும், அப் பகுதியில்

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அப்சர்வேட்டரி, புதுக்காடு ஆகியப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, விவசாயிகள் உரமிடுதல், மண் கட்டுதல், விதை நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஏற்ற மழையாக இருப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai