Enable Javscript for better performance
கொடைக்கானலில் வால் பேரிக்காய் விளைச்சல் குறைவு: விலை அதிகம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் வால் பேரிக்காய் விளைச்சல் குறைவு: விலை அதிகம்

    By கொடைக்கானல்  |   Published on : 22nd May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் பருவமழை பெய்யாததால், வால் பேரிக்காய் விளைச்சல் வெகுவாகக் குறைந்தது. இதனால், விலை அதிகரித்துள்ளது.

    கொடைக்கானலில் பேரி, பிளம்ஸ், செர்ரி புரூட், மரத் தக்காளி, பலா போன்றவைகள் விளைகின்றன. இதில், வால் பேரிக்காய் கொடைக்கானல் பகுதிகளான பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், குருசடிமெத்து, அஞ்சுவீடு, பேத்துப்பாறை, அடுக்கம், பாலமலை, தாமரைக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன.

    கடந்த 3 ஆண்டுகளாகவே போதிய பருவமழை இல்லாததால், பழங்களின் விளைச்சல் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதில், மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வளரும் பேரிக்காயில் சாதாரண பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, வால்பேரி, இனிப்பு பேரி, ஊட்டி பேரி போன்றவைகள் விளைகின்றன.

    இவற்றுள், வால்பேரி நல்ல சுவையாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தற்போது, பருவமழை இல்லாததால் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரைக்கும் விற்கப்பட்ட வால்பேரி, தற்போது ரூ. 120 முதல் ரூ. 160 வரை விற்பனையாகிறது.

    இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், கொடைக்கானலில் ஊடு பயிராக பேரிக்காய், அவக்கேடோ, பலா போன்ற மரங்களை பராமரித்து வருவதால், அந்தந்தக் காலங்களில் வரும் காய்களை விற்பனை செய்து வருவது வழக்கம். தற்போது, வால்பேரிக்காய் சீசனாக இருந்தும், பருவமழை இல்லாத காரணத்தால் விளைச்சல் வெகுவாக பாதிப்பு அடைந்துள்ளது. இதனால், விலை அதிகமாக உள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai