Enable Javscript for better performance
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு:திண்டுக்கல்லில் 120 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு:திண்டுக்கல்லில் 120 பேர் எழுதினர்

    By திண்டுக்கல்,  |   Published on : 22nd May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில், திண்டுக்கல் மையத்தில் 120 பேர் பங்கேற்றனர்.

    தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 123 பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 15 பார்வையற்றோர், 105 பிற மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 120 பேர் தேர்வு எழுதினர். பார்வையற்ற 15 பேருக்கு உதவியாக, கல்வித் துறை மூலம் நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தத் தேர்வு, பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. தேர்வு மையத்தில், தொழில்கல்வி இணை இயக்குநர் தர்மராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் பா. சுகுமார் தேவதாஸ், திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர் மாலா மணிமேகலை உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai