Enable Javscript for better performance
திண்டுக்கல் பகுதியில் மழை: வெப்பம் தணிந்தது- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் பகுதியில் மழை: வெப்பம் தணிந்தது

    By திண்டுக்கல்  |   Published on : 22nd May 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால், வெப்பம் தணிந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால், கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடுமையான வெப்ப நிலையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பல இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், குடிநீர் பிரச்னையும் அதிகரிக்கத் தொடங்கியது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் அவ்வப்போது, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்த சில நாள்களாக மழை பெய்யாததால், மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி, வேடசந்தூர், கொடைக்கானல் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. இந்த பகுதிகளில் புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு விவரம்(மி.மீட்டரில்): பழனி 2.00, வேடசந்தூர் 3.14, சத்திரபட்டி 101.60, வேடசந்தூர் புகையிலை மையம் 4.08, கொடைக்கானல் போட் கிளப் 1.75, காமாட்சிபுரம் 1.60.

    அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் புதன்கிழமை பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், திண்டுக்கல், சாணார்பட்டி பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதேபோல், செம்பட்டி, சின்னாளப்பட்டி பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

    கோடை காலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai