Enable Javscript for better performance
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல்:பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல்:பள்ளிகளில் பதிவு செய்யப்பட்டது

    By திண்டுக்கல்  |   Published on : 22nd May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் புதன்கிழமை வழங்கப்பட்டதை அடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்திலும் பதிவு செய்யப்பட்டது.

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21,291 பேரில் 19,355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.புதன்கிழமை, மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளிலேயே வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில், அந்தந்தப் பள்ளிகளின் மூலம் பதிவு செய்யப்பட்டன. இதற்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் கடந்த புதன்கிழமை, தனித்தனி யூசர் ஐடி மற்றும் கடவுச் சொல் (பாஸ் வேர்ட்) வழங்கப்பட்டன.

    மாவட்டக் கல்வி அலுவலகத்தின் மூலம் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவு செய்வதற்கான பயணியர், பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    யூசர் ஐடி.யை மாற்றிய பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்ட முதல் 15 நாள்கள் வரை பதிவு செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பதவி மூப்பு வழங்கப்படும் என்பதால், சான்றிதழ் பதிவு செய்வதற்கு மாணவர்கள் முந்தி அடித்துச் செல்லவில்லை. பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவு செய்வதற்கான யூசர் ஐடி.யை பயன்படுத்தி, பிளஸ் 2 சான்றிதழ்களை பதிவு செய்ததால் குளறுபடி ஏற்பட்டது.

    அதன்பின்னர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டதை திருத்தி அமைத்தனர். அதனால், சான்றிதழ் பதிவு செய்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

    அதேபோல், இணையதள வசதி கிடைக்காத ஊரகப் பள்ளி மாணவர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் பதிவு செய்து கொள்வதற்கான மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai