Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

    By திண்டுக்கல்  |   Published on : 23rd May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க. ரெங்கசமுத்திரம் கிராம மக்கள் திரளாக வந்திருந்தனர்.

      அம்பாத்துரை அருகே உள்ளது ரெங்கசமுத்திரம் கிராமம். இங்கு, காளியம்மன் கோயில் அருகே உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இக்கிராம மக்கள்  திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

      இது குறித்து அக்கிராமத்தினர் கூறுகையில், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் அந்த வழியைப் பயன்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பாதையை பட்டா போட்டதுடன், முள்போட்டும் அடைத்துவிட்டனர்.எனவே, நடவடிக்கை இல்லாததால், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்துள்ளோம் என்றனர்.  கோட்டாட்சியர் இல்லாததால், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் பாலசுப்பிரமணி பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது, சம்பந்தப்பட்ட இடத்தை சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai