Enable Javscript for better performance
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக மாதந்தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டம், வெள்ளிக்கிழமை (மே 23) முதல் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளது:

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், மீண்டும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

      மே மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

    இதில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும்.

    எனவே, அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai