Enable Javscript for better performance
உமாநாத் மறைவுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஆர். உமாநாத்துக்கு (93), திண்டுக்கல்லில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

      திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆசாத் தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

      மார்க்சிஸ்ட் சார்பில், சட்டப்பேரவை உறுப்பினர் கே. பாலபாரதி, மாவட்டச் செயலர் என். பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்டச் செயலர் க. சந்தானம், துணைச் செயலர் எஸ். ஜெயமணி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் இரா. விச்சலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai