Enable Javscript for better performance
கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா:பக்தர்கள் பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா:பக்தர்கள் பால்குட ஊர்வலம்

    By கொடைக்கானல்  |   Published on : 23rd May 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

       இக்கோயில் திருவிழா கடந்த 20 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, மறுபூஜை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

      தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில், சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

      ஊர்வலமானது, அருள்மிகு காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு ஏரிச் சாலை, செவன் ரோடு, அண்ணா சாலை, கே.சி.எஸ். திடல், மூஞ்சிக்கல் வழியாக கோயிலை அடைந்தது.

      அங்கு, அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை, வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி, இளைஞரணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai