Enable Javscript for better performance
சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    சுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    By பழனி  |   Published on : 23rd May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில், செவ்வாய்க்கிழமை கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

       கல்லூரி வளாகத்திலுள்ள விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தலைமை வகித்தார். கல்லூரி சேர்மன் ஜனார்த்தனன், செயலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி மாவட்டக் கல்வி அலுவலர் கலையரசி வாழ்த்துரை வழங்கினார்.

      கல்லூரி முதல்வர் சரவணன் பொறியியல் கல்லூரியில் உள்ள துறைகள் பற்றியும், வேலைவாய்ப்பு பற்றியும் உரை நிகழ்த்தினார்.

      திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக டீன் இளங்கோவன் ஆற்றிய சிறப்புரையில், அண்ணா பல்கலைக்கழக நேர்முக சேர்க்கை தொடர்பாக கலந்தாய்வு விளக்கங்களையும், பொறியியல் கல்லூரிகள் செயல்பாடு, மாணவர்களின் கடின உழைப்பின் அவசியம் குறித்தும் விளக்கினார்.

      பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கந்தசாமி தொழில்நுட்பக் கல்வி, தொழில் கல்வி தொடர்பான விளக்கம், 10ஆம் வகுப்பு தேறிய மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் கிடைக்கக்கூடிய சலுகைகள் பற்றியும் விளக்கினார்.

      கனரா வங்கி முதன்மை மேலாளர் கோபகுமார், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு வங்கிக் கடன் தொடர்பான ஆலோசனைகளையும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.  மருத்துவர் மாரிமுத்து மருத்துவத் துறைகளில் உள்ள பல்வேறு துறைகள் பற்றியும், வழக்குரைஞர் பாலுசாமி மூன்றாண்டு, ஐந்தாண்டு சட்டப்படிப்பு குறித்தும் விவரித்தனர்.

      நிகழ்ச்சியில், பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்ற நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர்.  பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் நந்திவர்மன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai