Enable Javscript for better performance
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு வட்டங்களில் இணையதள சான்றிதழ் சேவை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் கிழக்கு, மேற்கு வட்டங்களில் இணையதள சான்றிதழ் சேவை

    By திண்டுக்கல்,  |   Published on : 23rd May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறை தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலம் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

      திண்டுக்கல் மாவட்டத்தில் 9 தாலுகாகள் உள்ளன. இதில், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு ஆகிய 2 வட்டங்களை (தாலுகா) முன்மாதிரி வட்டமாகக் தேர்வு செய்து, தமிழக அரசு அறிவித்துள்ள மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் பேசியது:

    இத்திட்டத்தின் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றுகளை இணையதளம் (ஆன்-லைன்) மூலமாக பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால், அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று காத்திருக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்படாது.

      தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள், இரண்டு வட்டங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.  பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சியில், திண்டுக்கல் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் செல்வக்குமரன், இணையதள சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக், திண்டுக்கல் மாவட்ட தகவல் அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai