Enable Javscript for better performance
நத்தம் பகுதியில் சூறாவளியுடன் மழை: வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதம்- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் பகுதியில் சூறாவளியுடன் மழை: வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதம்

    By நத்தம்  |   Published on : 23rd May 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் அருகே முளையூரில் சூறாவளியுடன் பெய்த மழையினால், மா, தென்னை, வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.

      திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. நத்தம் அருகே உள்ள முளையூரில் சூறைக் காற்றுடன் பெய்த மழையினால், மா, தென்னை மற்றும் வாழை மரங்கள் ஒடிந்து சேதமாயின. இந்த ஊரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் (78) என்ற விவசாயி, சுமார் 5 ஏக்கர் வரை கற்பூரவள்ளி ரக வாழையை 10 மாதங்களுக்கு முன்பு நடவு செய்து பராமரித்து வந்தார்.

      தற்போது இந்த சூறைக் காற்றினால், பலன்தரும் நிலையில் இருந்த வாழை மரங்கள்  அனைத்தம் சேதமடைந்தன.

      இது குறித்து, அந்த விவசாயி கூறுகையில், அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளியினால் சேதமடைந்துவிட்டன. இதனால், பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai