Enable Javscript for better performance
நிலக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

    By வத்தலகுண்டு  |   Published on : 23rd May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிலக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

      இந்தத் தேர்தல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரியும், வட்டார வளர்ச்சி அதிகாரியுமான ஜோசப் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்.

      இதற்கு, 17 ஒன்றியக் கவுன்சிலர்கள் வந்திருந்தனர். பிள்ளையார்நத்தம் ஒன்றியக் கவுன்சிலர் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், ஏகமனதாக சீனிவாசன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

      சீனிவாசனை, நிலக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை ஒன்றியச் செயலர் தண்டபாணி மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சேகர், மாவட்டக் கவுன்சிலர் லட்சுமி செல்வராஜ், ஒன்றிய அவைத்தலைவர் வாசிமலை ஆகியோர் வாழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai