Enable Javscript for better performance
ரயில்களில் கம்பி திருடிய 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரயில்களில் செப்புக் கம்பிகளை திருடியதாக 3 பேரை, ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

      திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ராமச்சந்திரன் (26) மற்றும் முனியாண்டி (25). சிலுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (25). இவர்கள் மூவரும் சேர்ந்து, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில்களில் செப்புக் கம்பிகளை திருடியுள்ளனர்.

      அப்போது, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், திருட்டில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

       திருடப்பட்ட கம்பிகளின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும் என, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சிவக்குமார் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai