Enable Javscript for better performance
ராஜீவ் காந்தி நினைவு நாள்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் புதன்கிழமை ராஜீவ் காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

      பழனி பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.

      அப்போது, ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், வட்டாரத் தலைவர் கனகசபாபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சுந்தர், முருகபாண்டியன், மூப்பனார் பேரவை பழனிக்குமார், ஆசிரியர் சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai