Enable Javscript for better performance
3 லட்சம் பூக்கள் இடம்பெறும் மலர் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    3 லட்சம் பூக்கள் இடம்பெறும் மலர் கண்காட்சி

    By திண்டுக்கல்  |   Published on : 23rd May 2014 12:19 AM  |   அ+அ அ-   |    |  

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இந்த ஆண்டு கோடை விழா வரும் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

       இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளதாவது:

    கொடைக்கானலில் ஆண்டுதோறும் கோடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோடை விழாவை, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  முதல் நாளான 25ஆம் தேதி துவக்கி வைக்கிறார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மலர் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார். சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார்.

      மேலும், இந்த விழாவில், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

      தொடர்ந்து, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 56 வகையான 3 லட்சம் மலர்களைக் கொண்டு கண்கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மேலும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு பிரமீடு, இந்திரன் யானை உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

      கன்னியாகுமரி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோட்டக்கலைத் துறையினர் அரியவகை மலர்களைக் கொண்டு கண்காட்சி அரங்குகள் அமைத்து வருகின்றனர். இது தவிர, பலவிதமான காய்கறிகளால்  பல்வேறு வகையான அலங்காரங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசுத் துறை கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

       கோடை விழா தொடக்க நாள் முதல், தினமும் படகுப் போட்டிகள், நாய் கண்காட்சி, மீன் பிடிக்கும் போட்டி, சைக்கிள் போட்டி, குதிரைப் போட்டி, படகு அலங்காரப் போட்டி, கால்பந்துப் போட்டி, கபடிப் போட்டி, கோலப் போட்டி, மினி மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கிராமிய கலைநிகழ்ச்சிகள், பல்சுவை இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், மெல்லிசைக் கச்சேரிகள், ஒயிலாட்டம், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியனவும் நடத்தப்படுகின்றன.

      இவை அனைத்தும், கோடை விழா நிறைவு நாள் வரை பிரையண்ட் பூங்கா, மூஞ்சிக்கல் மைதானம், கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்ல, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பழனி, மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, தேனி ஆகிய பகுதிகளிலிருந்து  17 சிறப்பு பேருந்துகளும், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பிரையண்ட் பார்க் , செட்டியார் பார்க், பைன் பாரஸ்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, பேரிஜம், லேக்வியூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் ரூ. 80 கட்டணத்தில் சுற்றிப் பார்க்கும் வகையில், 10 அரசு பேருந்துகள் என மொத்தம் 27 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

      கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் மூலம் தங்கும் விடுதிகள், உணவகங்களில் சுகாதாரமான உணவு மற்றும் நியாயமான விலைப் பட்டியல்களை கடைபிடிக்கவும், கொடைக்கானலின் அனைத்து பகுதிகளையும் தூய்மையாக வைத்திடவும், பாலித்தீன் பயன்பாடு இல்லாத வகையில் கண்காணித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      மருத்துவத் துறையின் மூலம் 2 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தேவையான இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

      எனவே, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த கோடை விழாவில் கலந்துகொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp