Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி மாநில அளவில் 2-ஆம் இடம்- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவி மாநில அளவில் 2-ஆம் இடம்

    By ஒட்டன்சத்திரம்  |   Published on : 24th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவி ஆர்.தாரணி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ஆம் இடமும், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் முதலிடமும், பழனி கல்வி மாவட்டத்தில் முதலிடமும் பிடித்தார்.

    ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 163 பேர் தேர்வு எழுதினர். அதில் ஆர்.தாரணி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றார். இவர், திண்டுக்கல் வருவாய் மாவட்டம் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு,தமிழ்-99,ஆங்கிலம்-99,கணிதம்-100,அறிவியல்-100,சமுக அறிவியல்-100 மொத்தம் 498. இப்பள்ளியை சேர்ந்த பி.வர்சா, டி,வினோதா, என்.நவீன்குமார் ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 3-ஆம் இடமும், பழனி கல்வி மாவட்டத்தில் 3-ஆம் இடமும் பிடித்தனர்.

    இப்பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும்,480 மதிப்பெண்களுக்கு மேல் 74 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 130 பேரும் பெற்றனர்.

    அறிவியல் பாடத்தில் 46 பேரும், சமூக அறிவியலில் 42 பேரும், கணிதத்தில் 36 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும், தமிழில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களை பள்ளித் தாளாளர் கே.திருப்பதி, செயலர்கள் கண்ணன், மீனா, முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

    மாநில அளவில் 2-ம் பிடித்த மாணவி ஆர்.தாரணி கூறியதாவது, கடின உழைப்பால் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது. எனது பெற்றோர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உடந்தையாக இருந்தனர். மருத்துவராக பணிபுரிய விரும்புகிறேன் என்றார்.

    இவரது தந்தை ரெங்கசாமி விவசாயம் செய்து வருகிறார். தாய் செல்வராணி இல்லத்தரசி. தம்பி சூரியபிரசாத் இதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai